சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

181 0

Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்தது முதலே போட்டியாளர்கள் தேர்வினால் விமர்சனங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் திவாகருடைய செயல்பாடுகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கம் தான். ஆனால் அந்த விமர்சனம் என்பது போட்டியில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை சார்ந்ததாக இருக்கும். ஆனால், இம்முறை “வாட்டர்மெலன் ஸ்டார்” என்று கூறிக்கொள்ளும் திவாகர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு என்பது அவரது வெளியுலக வாழ்வு முதல் பிக் பாஸ் வீடு வரை நீண்டு வந்திருக்கிறது.
பிக் பாஸ் துவங்கிய இரண்டாவது நாளிலேயே பிரவீன் ராஜ் உடன் ஏற்பட்ட மோதல் முதல் திவாகர் தன்மீது விமர்சனம் வைக்கும் ஒவ்வொருவரையும் என்னிடம் பேச உனக்கு தகுதி தராதரம் இல்லை என பேசுவதையே வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த வாரம் விஜய் சேதுபதியிடம் வாங்கிக் கட்டும் வரை அதே பாணியையே அவர் தொடர்ந்து வந்தார். இது வரை திவாகர் தன்னிடம் வாக்குவாதம் செய்த பார்வதி மீது மட்டும் தான் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை. இந்நிலையில் கானா வினோத் காமெடியாக பாஸ் செய்யும் கமெண்டுகளுக்கு கூட திவாகர் வன்மம் நிறைந்த வார்த்தைகளையே பிரயோகிக்கிறார்.
ஏற்கனவே பலமுறை அவரை கரிச்சட்டி, தீஞ்சவாயன், கருவாயன் என நிறம் சார்ந்த விமர்ச்சனங்களை வைத்து வந்த திவாகர் நேற்றைய எபிசோடில் எமதர்மராஜா என திவாகரை பார்த்து கானா வினோத் கமெண்ட் பாஸ் பண்ணி இருப்பார். அதற்கு ஆவேசமடைந்த திவாகர் வினோத்தை தீண்டத்**** என வார்த்தையை விட்டிருப்பார். சேனல் நிர்வாகம் அதை கட் செய்து விட்டதுடன் போதும் என நிறுத்துக் கொள்ளாமல் திவாகரை கண்டிக்க வேண்டும் எனவும் ஒருசாரர் கருத்தை முன் வைக்கின்றனர்.மேலும், சமூக வலைத்தளங்களில் #RedCardForDiwakar என்ற ஹேஷ்டேக் பரவலாக டிரெண்டாகி வருகிறது. பலரும் திவாகரை உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் போட்டியாளர்களை இழிவாகப் பேசும் விதம் பிக் பாஸ் விதிமுறைகளுக்கு மாறானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் எவிக்ட் ஆன பிரவீன் ராஜ் யூடியூப் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, திவாகர் பழகுறவர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்கிறார என்ற கேள்விக்கு, 1000 பெர்சண்ட். அந்த மனுசனுக்கு வேற எதுவும் தெரியாது. ரீல்ஸை விட அவர் ரத்தத்தில் ஒன்று அதிகமாக இறங்கி இருக்குன்னா அது ஏற்றத்தாழ்வு பாக்குறது தான்.

நீங்க ஃபேஸ் பண்ணி இருக்கிங்களா என்ற கேள்விக்கு, நான் ஃபேஸ் பண்ணி இருக்கிறேன் என்கிறார். மேலும் கானா வினோத் ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பாடலின் 2வது வரியில் ஒரு வார்த்தை வரும், அதற்கு அவர் சூப்பர் சார். அதை ரிப்பீட் பண்ணுங்க எனக் கேட்டார்.
அண் போட்டியாளர்களிடம் ஜாதி பார்க்கும் திவாகர் பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாகவும் விளங்குகிறார். வீட்டில் வந்த நாள் முதல் இன்னஸண்டாக காட்டிக் கொண்டு பெண்களிடம் இவர் அடிக்கும் லூட்டி அவர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் கொதித்தெழ வைத்துள்ளது.

சாம்ராஜ்யம் டாஸ்க்கின் போது அரோராவின் கூந்தலை நுகர்ந்து பார்த்த திவாகர் சில நாட்களுக்கு முன் அவர் அருகில் இருக்கும் போதும் முகர்ந்து பார்த்து இருப்பார். மேலும் ரீல்ஸ் செய்யலாம் என பெண் போட்டியாளர்களை அழைத்து காதல் சீன்களை நடித்துக் காட்டுவதாக எல்லை மீறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இன்று வியானாவை ரீல்ஸ்க்கு அழைத்த போது அவர் தங்கை வியானா உடன் ரீல்ஸ் செய்ய போகிறேன் என கேமிரா முன் கூறும் படி கூறுவார். இதனால் உஷார் ஆன திவாகர் ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு வாரேன் என எஸ்கேப் ஆவார். அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் என்பதால் தான் இவர் தப்பித்து விடுகிறார். சுதாரிப்பானவர்களிடம் இவர் பருப்பு வேகாது என நினைத்தால் அதுவும் இல்லை.பாருவை தங்கை என கூறிக்கொள்ளும் இவர் 2 வாரங்களுக்கு முன் பாரு அழகாக இருப்பதாக கூறி வலிய சென்று கட்டியணைப்பார். பாருவும் கம்ருதீனும் பேசும் போது நடுவில் நுழைந்து அழகா இருக்க உன்ன அடுத்தவனுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பார்.இவர் அடிக்கும் லூட்டிகளை வெளியிலிருந்து பார்த்து வந்த வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் இவரிடம் உஷாராக இருந்த நிலையில் வந்த நாள் முதல் திவ்யா அழகாக இருக்கிறார் அவருடன் ரீல்ஸ் செய்ய வேண்டும், அவர் சிரிப்பு அழகாக உள்ளது என தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வழிந்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில் திவாகரிடம் உங்களை விஷ் பண்ண கைகொடுத்தால் இப்படியா கைய பிடிச்சு நசுக்குவீங்க என திவ்யா கேட்க அதற்கு எல்லாம் ஒரு ஆசை தான் என திவாகர் பதில் கொடுத்து பல்லை காட்டிக்கொண்டிருப்பார். என்ன தான் பிக்பாஸ் நிர்வாகத்தினர் திவாகரின் சில்மிஷங்களை கட்செய்து, கட்செய்து டெலிகாஸ்ட் செய்தாலும் கண்டெண்டுக்காக 24/7 பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து இதுபோன்ற செயல்கள் தப்பவில்லை. #biggbosstamil #biggboss #tamil #vijaytv #vijaytelevision #cookwithcomali #bb #bharathikannamma #vijaytvserial #supersinger #trending #pandianstores #thalapathy #bigboss #tamilmemes #vijay #kollywood #kavin #tamilactress #oviya #vijaytvshow #losliya #rajarani #tamilcinema #kamalhaasan #ramyapandian #tamilserial #chennai #love #eeramanarojave
இதனால் திவாகர் பெண் போட்டியாளர்களிடம் வக்கிரமாக பேசும் பல காணொலிகளும் தற்போது வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

மேலும், பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தகைய நிகழ்வு நடந்திருந்தால் பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பிற்காக திவாகர் போன்ற நபர்கள் வெளியேற்றப்பட்டிருப்பர் என விஜய் சேதுபதியை டேக் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், சாம்ராஜ்ஜியம் டாஸ்க்கின் போது திவாகர், அரோரா அழுவது போல் செய்து கொண்டிருக்கும் போது தர்பீஸ் செத்து விட்டாரா என எதிரணியில் இருந்து வினோத் கேட்பார். இந்த வீடியோவை பகிர்ந்து வினோத்துக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என திவாகரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஷோ இப்படி குட்டிச்சுவரா கெடுத்து வைச்சு இருக்காங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் வேதனையில் இருக்கும் நிலையில் இப்போது போட்டியாளர்களின் செயல் பிரச்சினையாக உருவெடுத்து வருவது ரசிகர்களை மேலும் வேதனையடையச் செய்துள்ளது.

Related Post

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - March 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

Water Heater வாங்குறதுக்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Posted by - December 23, 2025 0
குளிர்காலம் ஆரம்பிச்சுடுச்சா, வீடுகள்ல முதல் தேவை Water Heater (Geyser) தான். ஆனா மார்க்கெட்டுல இருக்குற நிறைய options-ல எது சரி, எது safe, எது current…

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

Posted by - April 10, 2023 0
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *