சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

152 0

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள கொம்புசீவி

கொம்புசீவி

‘கொம்புசீவி’ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.  கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகியுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் நிறைவுற்றது.

புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட்,  ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார். நிர்வாக தயாரிப்பு: ஜெயசங்கர், செல்வராஜ்.

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும். இப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.

ரிலீஸ் தேதி

கொம்புசீவி திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் முன்னிட்டு வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

Related Post

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

விஷாலை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்.. நாலா பக்கமும் துப்பறிவாளனுக்கு மூடப்படும் கேட்

Posted by - December 18, 2024 0
விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும்…

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - March 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…

COPY RIGHT சர்ச்சை! 20 கோடி கேட்டாரா தனுஷ்.. விளக்கம் அளித்த இயக்குநர் வெற்றிமாறன்

Posted by - June 30, 2025 0
வெற்றிமாறன் –  எஸ்டிஆர் 49 விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ்.…

“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

Posted by - August 24, 2023 0
விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *