18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

227 0

குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் போட்டோக்கள் தான் விதவிதமாக போட்டோ சூட் நடத்தி பரபரப்பை கிளப்பும் இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் நடித்திருக்கும் ஓ மை டார்லிங் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் இருக்கும் அனிகா அந்தப் படம் குறித்து வெளியான சர்ச்சைகளுக்கு ரொம்பவும் கூலாக பதில் அளித்திருக்கிறார். அதாவது அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

 

அதில் பலரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு அனிகா படுக்கையறை காட்சி, லிப்லாக் போன்ற அனைத்திலும் பயங்கர தாராளம் காட்டி இருந்தார். அவரிடமிருந்து இப்படி ஒரு கிளாமரை எதிர்பார்க்காத பலரும் அது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். தன்னை பற்றி வரும் அத்தனை கருத்துகளுக்கும் பதில் அளிக்காமல் இருந்த அனிகா இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ஓ மை டார்லிங் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த காட்சிகள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் கதைக்கு அந்த காட்சிகள் முக்கியம் என்பதால் தான் நான் நடித்தேன். மேலும் இயக்குனர் கதை சொல்லும் போதே அந்த காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி என்னிடம் தெளிவாக கூறினார்.

 

அதனால்தான் நான் அந்த காட்சியில் நடித்தேன். அது மட்டுமல்லாமல் படத்தில் பார்க்கும்போது அந்த காட்சி நிச்சயம் கண்களை உறுத்தும் படியாகவோ, அருவருப்பாகவோ இருக்காது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் இது போன்ற காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் சமாளிப்பதற்காக இது போன்ற கருத்துக்களை கூறுவது வழக்கம் தான்.

அந்த வகையில் ஹீரோயினாக மாறியிருக்கும் அனிகாவும் நன்றாகவே இந்த விஷயத்தை சமாளித்து பேசி இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தான் அவர் இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து இது போன்று கிளாமராக அவர் நடித்து வந்தால் கவர்ச்சி நாயகியாகவே முத்திரை குத்தப்பட்டு விடுவார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

Related Post

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை இவானா .

Posted by - July 2, 2025 0
நடிகை இவானா தமிழில் பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.…

விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.. லியோ பாடலால் எழுந்த சர்ச்சை

Posted by - June 26, 2023 0
பாடலால் சர்ச்சை லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி தான் வரவா’ விஜய்யின் குரலில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சமூக…

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - June 20, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின்…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *