பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

71 0

அரசு ஊழியர்கள் கோரிக்கை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது,

இதனையடுத்து தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதனையடுத்து உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசுஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.  இதனையடுத்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத காரணத்தால் வருகிற ஜனவரி 6ஆம் தேதி காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஓய்வூதியம் தொடர்பாக முழு அறிக்கையும் முதலமச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து  

பழைய ஓய்வூதிய திட்டம்- நாளை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தோடு அமைச்சர்கள் ..வேலுதங்கம் தென்னரசு இன்று தலைமைசெயல்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போட்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி அமிர்தகுமார், தங்களது கோரிக்கைகளை அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகும், நாளை பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர்கள் குழு வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

Related Post

விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

Posted by - September 26, 2025 0
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் – பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..

Posted by - March 15, 2026 0
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் என்ற கெட்டப்பெயர் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் திமுக ஆட்சி…

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - September 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

Posted by - January 17, 2026 0
சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *