5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

234 0

5 வருடம் செம போர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல சீரியலின் கதாநாயகன்.

திரை துறையை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல், அனுதினமும் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சின்னத்திரைக்கு என்று பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அப்படி பிரபல சேனலில் ஒளிபரப்பான சீரியலின் கதாநாயகனே ஏன் தான் இந்த சீரியலில் நடித்தோம் என்று நொந்து போய் பேசியுள்ளார்.

அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை சீரியல்கள் ஆனது பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சீரியல்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதிலும் சீரியலில் வரக்கூடிய ரொமான்ஸ் காட்சிக்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர்.

Also Read: 18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.?

மேலும் ஐந்து வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் ரோஜா.இந்நிலையில் சீரியலின் கதாநாயகனாக நடித்தவர் தான் சிபு சூரியன். இவர் தற்பொழுது ஐந்து வருடமாக ஒரே  சீரியலில் அதே கேரக்டரில் தான் நடித்து வந்தது தனக்கே பிடிக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதுவும் இவர் இந்த சீரியலில் அர்ஜுன் சாராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் சீரியலில் ஐந்து வருடமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது என கூறியுள்ளார். கொலை மிரட்டல், கடத்தல் சீன், கண்டுபிடிப்பு, சேசிங் என இதுபோன்ற சீன்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் எனக்கு கொஞ்சம் கூட இதுபோன்ற சீன்களில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் சிபு சூரியன் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாக வலம் வந்தனர். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாருக்காகவே அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையிலும் சீரியலை விட்டு சிபு வெளியேறுவதாக இரண்டு முறை அறிவித்திருந்தார். ஆனால் சீரியலில் இருந்து விலகாமல் தனது பங்களிப்பை முழுவதுமாக கொடுத்துள்ளார்.

ஆனால் ரோஜா சீரியல் முடிந்த பிறகு  சீரியல்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு திரைப்படங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தற்பொழுது இயக்குனர் பிரவீன், சிபு-விடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுவும் டி ஆர் பி-யில் டாப் லிஸ்டில் இருந்த ரோஜா சீரியலை கதாநாயகனே இப்படி கழுவி கழுவி ஊற்றி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  இருக்கிறது.

Related Post

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்

Posted by - April 21, 2023 0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர்…

திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

Posted by - January 25, 2023 0
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய்…

குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்.. ரிவியூவர் முதல் இத்தனை பிரபலங்களா?

Posted by - March 19, 2024 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *