டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்

274 0

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் | Tamil  cinema dhanush, rajini, simbu so many celebrities blue tick removed from  twitter

இந்நிலையில் சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது. சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.

Related Post

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானா

Posted by - December 12, 2023 0
நடிகர் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் ஷோவை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக வருக்கு மிகப்பெரிய தொகையும் வருடா வருடம் சம்பளமாக தரப்பட்டு…

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

Posted by - December 21, 2023 0
விஜய் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த…

சாய் பல்லவி மீது கிரஷ், அதை தாண்டி..? ஆசையை கூறிய விவாகரத்தான 45 வயது நடிகர்

Posted by - May 31, 2023 0
சாய் பல்லவி தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பின், தொடர்ந்து தமிழ்,…

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - December 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *