வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்

65 0

‘வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதி​யம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்​வாகி​களான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்​தகு​மார், கண்​ணன் உள்​ளிட்ட 8 பேரை, நேற்று முன்​தினம் காலை 8 மணி​யள​வில் இருந்து வீட்டு சிலை​யில் திமுக அரசு வைத்​துள்​ளது.

சுமுக​மான முறை​யில் போராட்​டத்தை எதிர்​கொள்​ளத் தெரி​யாமல், இப்​படி சட்​டத்​துக்கு புறம்​பான வகை​யில் கைது நடவடிக்கைகளில் ஈடு​படு​வதும், அவர்​களின் செல்​போனைப் பறிப்​பதும் கடும் கண்​டனத்​துக்​குரியது.

கைது செய்​யப்​பட்​டு, வீட்​டுச் சிறை​யில் உள்​ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்​தா​லும், அதற்கு முழு பொறுப்​பும் முதல்​வர் ஸ்டா​லின் ஏற்க வேண்​டும்.

அறவழி​யில் போராடியதற்​காக, ஆசிரியர்களைக் கைது செய்​து, மறைத்து வைத்து துன்​புறுத்​து​வது கண்​டிக்​கத்​தக்​கது. கைது செய்​யப்​பட்​டுள்ள ஆசிரியர்களை உடனடி​யாக விடு​தலை செய்​ய​ வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

”உதயநிதியும் அவரது தாயும் தான் முதலமைச்சர்கள்”- செல்லூர் ராஜு விமர்சனம்

Posted by - December 12, 2022 0
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்,  பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்  பெரிய விசயம் இல்லை என்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *