3வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு- 4 கட்டுமான நிறுவனம், வீடுகளில் 7½ கிலோ தங்கம் பறிமுதல்

224 0

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.ஸ்ரீபதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு! | nakkheeran

சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Post

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - January 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் TV நிறுவனம்…

Posted by - August 2, 2023 0
விஜய் டிவி தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய். ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்…

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - April 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *