சத்து நிறைந்த கம்பு இனிப்பு ரொட்டி

337 0

அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. Is Wheat or Rye Bread Better for You? | livestrong

தேவையான பொருட்கள்:

கம்பு – 2 கப்

வெல்லம் – ½ கப்

தேங்காய்த் துருவல் – ¼ கப்

முந்திரி (பொடிதாக நறுக்கியது) – ¼ கப்

வெந்நீர் – தேவைக்கு ஏற்ப

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – தேவைக்கு

ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்

வாழை இலை – 1

செய்முறை:

* கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்

* அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.

சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.

* மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்

* இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

* வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்

* அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

Related Post

நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

Posted by - October 3, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் அவர் சொந்தமாக…

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

Posted by - February 20, 2023 0
வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ்,…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

Posted by - March 9, 2024 0
எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு…

கொங்கு ஸ்டைலில் சுவையான கோழி குழம்பு எப்படி செய்வது.?

Posted by - March 9, 2024 0
 கொங்கு பாணியில் சுவையாக கோழி குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். வீட்டில் கோழி குழம்பு வைத்தால் சத்தமே இல்லாமல் தட்டு காலியாகிவிடும். குழந்தைகள் முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *