840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’: 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

190 0

புதுடெல்லி :

மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது.

இந்தநிலையில், ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில், 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது.Air India has ordered 840 aircraft not 470 company mega plan has been  revealed | Air India ने 470 नहीं 840 विमानों का दिया है ऑर्डर, कंपनी के इस  मेगाप्लान के बारे

இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது:- ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்படும். மீதி 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடன் வாங்குவோம்.

முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும். கடந்த 2005-ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க ‘ஆர்டர்’ அளித்தது.

அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை ஆகும். ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும்.

ஏர் இந்தியாவை உலகத்தரமான விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் விமானங்களை வாங்குகிறோம்.

இதுதவிர, விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காக சி.எப்.எம்.இன்டர்நேஷனல், ரோல்ஸ்ராய்ஸ், ஜிஈ ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் வாங்குவதை பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஏற்கனவே வரவேற்றுள்ளனர்.

Related Post

கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

Posted by - December 28, 2022 0
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப்…

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *