கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

250 0

#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான விலைக்கு கேபிள் டிவி கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படி ஜியோ ஃபைபர் (Jio Fiber) திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. 150 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுப்பது மட்டுமல்லாமல், டிவி சேனல்கள், ஓடிடி சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த ஜியோ ஃபைபர் திட்டத்தின் சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.உங்க வீட்டுல கேபிள் டிவி இருக்கா? என்று கேட்கும் நிலைமையில்தான், அதன் சேவை இருக்கிறது. டிடிஎச், ஆண்ட்ராய்டு பாக்ஸ், ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவிக்கு நேரம் சரியாக இல்லை. அதிலும், ஜியோவின் ஃபைபர் திட்டங்கள் அடிமட்ட விலையில் நம்ப முடியாத சலுகைகளுடன் கஸ்டமர்களை அப்படியே மாற்றி வருகிறது. இதில் ஜியோ ஃபைபர் ரூ 1999 திட்டம் அடித்து நொறுக்குகிறது.ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ரூ 999 விவரங்கள் (Reliance Jio Fiber Plan Rs 999 Details): இந்த ஃபைபர் திட்டத்துக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), ஓடிடி (OTT) மற்றும் டிவி சேனல்கள் (TV Channels) சலுகை இருக்கிறது. முதலில் டேட்டாவை பார்க்கலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் சலுகையில் 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் இலவசமாக கொடுக்கப்படுக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை பெறலாம். ஆனால், சலுகை இதுமட்டுமல்ல 800+ டிவி சேனல்களின் சந்தாவையும் இந்த ஜியோ ஃபைபர் திட்டம் வழங்குகிறது.

இதில் எச்டி சேனல்களும் அடங்குகிறது. டிவி சேனல்களுக்கு பிறகு ஓடிடி சந்தாவை தருகிறது.அதிலும், பிரீமியம் ஓடிடி சந்தாக்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் (Jio Cinema Premium) சந்தாக்கள் கிடைக்கிறது. மேலும், ஜீ5 (ZEE5), ஜியோ டிவி பிளஸ் (JioTv+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) சந்தா கிடைக்கிறது.இதுபோக சோனிலிவ் (Sony Liv), ஏஎல்டிபாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடி ஆப்களையும், டிவி சேனல்களையும் உங்களது ஆண்ட்ராய்டு டிவியின் நேரடியாக பார்த்து கொள்ளலாம். இதற்கான டிவைஸ் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஜியோ ஃபைபர் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆனால், விலை ரூ.999ஆக இருக்காது. ஏனென்றால், ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். அதுவே ஃபைபர் திட்டங்களை முதல் முறை பெறும்போது, ஒரு மாதத்துக்கான வேலிடிட்டியில் திட்டம் கிடைக்காது. குறைந்தபட்சமாக மூன்று மாதங்கள் வேலிடிட்டிக்கு மட்டுமே திட்டங்கள் வழங்கப்படும். ஆகவே, அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இருப்பினும், அடுத்த முறை திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டிக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், முதல்முறை பெறும்போது, வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ், டிவி ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டி இருக்கிறது. இதனாலேயே முதலில் விலை கூடுதலாக இருக்கிறது.இதேபோல பல்வேறு ஃபைபர் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருக்கிறது. டேட்டா மட்டும் போதும் என்றால், ரூ 699 விலைக்கு கிடைக்கும் ஃபைபர் திட்டத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஃபைபர் டேட்டா மட்டும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால், டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்காது.

Related Post

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted by - July 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- ஆந்திராவில் கடந்த 4…

டாடா சியாரால EV வந்தா நல்லா இருக்கும்னு வெயிட் பண்றீங்களா.?

Posted by - February 14, 2026 0
புதிய டாடா சியரா EV, வலுவான தோற்றம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் நம்பகமான பிராண் பெயரைக் கொண்ட மின்சார SUV-யைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு…

கொரோனா அச்சம் – மீண்டும் வருகிறது வொர்க் ப்ரம் ஹோம்…!

Posted by - December 28, 2022 0
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப்…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? ‘இந்த’ வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

Posted by - December 16, 2024 0
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *