பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

67 0

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது.

IND vs PAK T20 World Cup 2026: டி20 உலக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. பொதுவாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

176 ரன்கள் டார்கெட்:

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அவர்களது தேர்வுக்கு பலன் அளிக்கும் விதமாக அதிரடி வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டானார். ஆனால், அதன்பின்பு அதிரடியாக  ஆடிய இஷான் 77 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது.

மாஸ் காட்டிய இந்திய பவுலிங்:

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாண்ட்யா வீசிய முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபர்ஹான் டக் அவுட்டாக, அடுத்து சையும் அயூப்பை 6 ரன்களில் பும்ரா அவுட்டாக்க அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் சல்மான் அகா 4 ரன்களில் அவுட்டானார்.

ஏமாற்றிய பாபர் அசாம்:

13 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பாபர் அசாம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் அதிரடியாக ஆட, முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் அவுட்டானார்.

உஸ்மான் கான் – ஷதாப்கான் ஜோடி சற்று சிறப்பாக ஆடியது. உஸ்மான் கான் சிறப்பாக ஆட நிதானமாக ஆடிய உஸ்மான் கான் 34 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக்க கடைசியில் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது.

வெறுப்பேற்றிய இந்தியா:

பாகிஸ்தான் தோல்வி உறுதியான போது, ரிங்குசிங், திலக் வர்மா  ஆகியோர்களுக்கு ஓவர் கொடுத்து பாகிஸ்தான் வீரர்களை மேலும் வெறுப்பேற்றினார். ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஷகின் அப்ரிடி மட்டுமே ரன்களை எடுத்துக்கொண்டிருக்க ஹர்திக் பாண்ட்யா பந்தில் கடைசி விக்கெட்டான உஸ்மான் தாரிக்கை அவுட்டாக்கினார்.

இதனால், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் ஆட மாட்டோம் என்று கூறிய பாகிஸ்தான் அணி பின்னர் விளையாடுகிறோம் என்று கூறியது. தற்போது விளையாடிய போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி:

இந்த வெற்றி மூலம் இந்த தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக பும்ரா, அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்ட்யா, குல்தீப் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Post

ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி – ஜெமிமா வெறித்தனம்

Posted by - October 31, 2025 0
Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு, இந்திய அணி பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளது. Jemimah…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி- துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

Posted by - July 19, 2023 0
தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்…

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Posted by - May 17, 2023 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில்…

தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

Posted by - April 12, 2023 0
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *