ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி உள்ளது…? உலகக் கோப்பையில் விளையாடுவாரா…? புது அப்டேட்..

483 0

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு இனி அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், எதிர்பார்த்ததைவிட அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நடந்த பயங்கர கார் விபத்தில், முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு தலை, முதுகு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரூர்க்கியில் முதற்கட்ட சிகிச்சையும், மும்பையில் கால் மூட்டில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக ஓய்வில் உள்ளதால் ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.இந்நிலையில், ரிஷப் பந்தின் உடல்நிலையில், எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கிறது எனவும், இதனால் மற்றொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.

Related Post

மார்ச் 22-இல் IPL போட்டிகள் தொடக்கம்… முதல் 21 மேட்ச்சுக்கான அட்டவணை வெளியானது!!

Posted by - February 23, 2024 0
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2024…

தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

Posted by - April 12, 2023 0
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

Posted by - April 7, 2023 0
IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *