“நாங்கள் செய்த ‘அந்த’ தவறு…” – இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா சொன்ன காரணம்!

310 0

ICC World Cup 2023 : 2003-ஆம் ஆண்டைப் போல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு சுக்கு நூறாக உடைந்தது.

“நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை”என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் வீறுநடை போட்டு வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் எளிதில் தோல்விய தழுவியது.

இந்நிலையில் இந்திய அணியின் அதிர்ச்சி தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், “இறுதிப்போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. குறிப்பாக கோலியும் ராகுலும் நன்றாக ஆடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.” என்றார்.தொடர்ந்து பேசுகையில்,  “பேட்டிங்கின் போது ரன் குவிக்க தவறினோம். குறிப்பாக, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை அடிப்போம் என  எதிர்பார்த்தோம். நிச்சயமாக இன்னும் 20-30 ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும். 240 ரன்கள் மட்டும் எடுத்திருக்கும்போது, விக்கெட்டுகளை வேகமாக எடுக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது விக்கெட் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. ” என்றார்.

“அதேநேரம் ஹெட்டும் லபுஷேனும் சிறப்பாக ஆடினார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிட்ச்சின் தன்மை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவதற்கு சுலபமாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம், அவ்வளவுதான்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக  அகமதாபாத் மைதானத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா, 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஸ்ரேயஸ் ஐயரும் 4 ரன்களில் அவுட் ஆனது அணியை ஆட்டம் காணச் செய்தது. பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிறகு கோலி 54 ரன்களிலும், ராகுல் 66 ரன்களிலும் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் எடுத்ததுஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைதொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மூவரும் 50 ரன்களுக்குள்ளாகவே அவுட்டாகி வெளியேற பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேனும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்திருந்தபோது டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இறுதியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய இலக்கை எட்டியது.

Related Post

Generated Image February 23 2026 10 20AM

முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

Posted by - February 23, 2026 0
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20…

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி- துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

Posted by - July 19, 2023 0
தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்…

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

Posted by - April 20, 2023 0
அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின்…
Generated Image November 12 2025 10 03AM

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *