முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

60 0

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலேயே இந்திய அணியை தென்னாப்ரிக்கா வீழ்த்தியுள்ளது.

இந்தியாவை வீழ்த்திய தென்னாப்ரிக்கா..

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவுற்று, சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய எதிரணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை கொடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. இதனால், 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

 

முடிவுக்கு வந்த ஆதிக்கம்..

வலுவான மற்றும் நீண்ட பேட்டிங் லைன் – அப்பை கொண்டிருந்தாலும், தென்னாப்ரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி கண்டது. இதன் மூலம், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 12 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த கண்டுள்ள முதல் தோல்வி இதுவாகும். இதுபோக, கடந்த 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, விளையாடிய 19 போட்டிகளில் இந்திய அணி எதிர்கொண்ட முதல் தோல்வி இதுவாகும். 17 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தை இழந்துள்ளது. அதற்கும் முன்னதாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் கூட, லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதி என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தோல்வியே காணாமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச்சு போட்டு பழிதீர்த்த மார்க்ரம் பாய்ஸ்

கடந்த 2007ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, டி20 உலகக் கோப்பையை வெல்லவே இல்லை என்ற ஏக்கம் 2024ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த அணி நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில், இதே மார்க்ரம் தலைமையிலான தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி தான்,  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த போட்டியில் தென்னாப்ரிக்கா அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் அபாரமான பந்துவீச்சு மற்றும் சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றி அமைத்தது. 2013ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி வென்ற முதல் ஐசிசி கோப்பையும் அதுவே ஆகும். அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தென்னாப்ரிக்கா அணி பழிதீர்த்துள்ளது.

இந்திய அணிக்கான வாய்ப்பு:

தென்னாப்ரிக்கா அணி உடனான தோல்வி மூலம், அரையிறுதி போட்டிக்கு முன்னேற, சூப்பர் 8 சுற்றில்  மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ம் தேதி சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், மார்ச் 1ம் தேதி கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Post

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

Posted by - July 23, 2025 0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.…

IPL Auction 2025: அஷ்வின், நூர் அகமதை வாங்கியது ஏன்? – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

Posted by - November 25, 2024 0
நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.…

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா?

Posted by - March 8, 2026 0
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து…

கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

Posted by - March 9, 2025 0
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *