TVK Vijay: ‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ .. விஜய் ஆதரவாக இளையராஜா.. மாறும் களம்!

58 0

விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து ஆதரவுக்குரல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை, பெரியதிரை பல பிரபலங்கள் அவருக்காக வீதிதோறும் பரப்பு மேற்கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது யூட்யூப் பக்கத்தில் விஜய் பட பாடல் ஒன்றை திடீரென வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஆதரவு தருகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரபரப்பில் தமிழக அரசியல் களம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வழக்கமாக திமுக அல்லது அதிமுக ஜெயிக்கும் என்பதை எளிதாக கணிக்கும் அரசியல் களம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகையால் திசை மாறியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த கருத்துக்கணிப்பு 

இந்த நிலையில் ஏப்ரல் 29ம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வந்தது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கருத்து கணிப்புகள் அதிமுகவுக்கும், ஒரு கருத்துக்கணிப்பு தவெகவுக்கும் ஆதரவாகவும் உள்ளது. கருத்துக்கணிப்பு எல்லாம் மாயை வேலை என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. கண்டிப்பாக நாங்கள் தான் ஜெயிப்போம்  என திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மும்முரம் காட்டும் அரசியல் கட்சிகள்

இதனிடையே தேர்தலில் ஜெயித்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் வாக்கு எண்ணிக்கையின்போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் அசைக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து ஆதரவுக்குரல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை, பெரியதிரை பல பிரபலங்கள் அவருக்காக வீதிதோறும் பரப்பு மேற்கொண்டனர். இந்த நிலையில் மே 4ம் தேதியை நோக்கி அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

இளையராஜாவும் ஆதரவு இந்த நிலையில் இளையராஜா தனது யூட்யூப் பக்கத்தில் விஜய் நடித்த படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 1988ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நிழல்கள் ரவி, வாணி விஸ்வநாத், ராதிகா நடித்த படம் ‘இது எங்கள் நீதி’. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருப்பார். அப்படத்தில் இடம் பெற்ற சின்னதம்பி உன்னை நம்பி நாடு காத்திருக்கு என தொடங்கும் வரிகள் மூலம் விஜய்க்கு மறைமுகமாக இளையராஜா ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வியெழுந்துள்ளது. எனினும் இளையராஜா பதிவுக்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

Related Post

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

விஜய் முதலமைச்சர் ஆவாரா?

Posted by - February 10, 2026 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, அவரை பற்றிய பேச்சு தேசிய அளவிலும் வர தொடங்கி இருக்கிறது. அவரது கடைசி படமான…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *