weather

“தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!” – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

109 0

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 1.5 கிமீ உயரம்வரை, தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா  வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough)  நிலவுகிறது. இதன் காரணமாக 01-05-2026 அன்று தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்  கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.
02-05-2026: தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்  கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

03-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்  கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், திருப்பூர் மலை பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.
04-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன்  கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.
05-05-2026: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-05-2026: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:
01-05-2026 முதல் 05-05-2026 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

01-05-2026 முதல் 05-05-2026 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
01-05-2026 முதல் 05-05-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (01-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
நாளை (02-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:
01-05-2026 முதல் 05-05-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
01-05-2026 முதல் 02-05-2026 வரை: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-05-2026: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Post

பூலாங்கிழங்கின் மகிமை.. கமகம பூலாங்கிழங்கு பொடி எப்படி செய்யணும் தெரியுமா? வேற லெவல் வெள்ளை மஞ்சள்

Posted by - January 6, 2024 0
சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?…

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *