பெங்களூருவில் திருமணத்துக்கு மறுத்த காதலியை 16 இடங்களில் வெட்டி கொன்ற வாலிபர்

208 0

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், கோண சீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நளமதி அப்புலு சவுத்ரி. இவரது மகள் லீலா பவித்ரா (வயது 28). மகளின் படிப்புக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நளமதி அப்புலு சவுத்ரி கோண சீமாவிலிருந்த சொந்த வீடு, நிலங்களை விட்டுவிட்டு காக்கிநாடாவிற்கு குடிபெயர்ந்தனர்.After knife attack, activist files attempt to murder case | Vadodara News -  Times of India

காக்கிநாடாவில் உள்ள ஜெகன்நாதபுரம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து மகளை பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை படிக்க வைத்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் லீலா பவித்ரா எம்.எஸ்.சி படித்தார். அதே கல்லூரியில், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், நரசன்னபேட்டை, வெள்ளி வலசை பகுதியை சேர்ந்த தினகர் (வயது 29) என்பவரும் படித்து வந்தார். தினகர், லீலா பவித்ரா நண்பர்களாக பழகினர். பின்னர் காதலர்களாக மாறினர்.

கல்லூரி படிப்பை முடித்த லீலா பவித்ரா கர்நாடகா மாநிலம் பெங்களூரு பழைய ஏர்போர்ட் ரோடு, முருகேஷ் பாளையத்தில் உள்ள ஒமேகா ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதேபோல் அங்குள்ள தொம்மலூரில் லூசிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் தினகர் வேலை செய்து வந்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகும் இருவரும் அருகருகே வேலை செய்து வந்ததால் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் லீலா பவித்ரா வீட்டிற்கு தெரியவந்தது. தினகர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு லீலா பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிடுமாறு கண்டித்தனர்.

பெற்றோர் கண்டித்ததால் லீலா பவித்ரா தினகரனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். காதலியுடன் பழகி பேச முடியாமல் தினகரன் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லீலா பவித்ரா வேலை முடித்து நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார்.

காதலிக்காக வெளியே காத்திருந்த தினகர், லீலா பவித்ரா வெளியே வந்தவுடன் தனியாக பேச வேண்டும் என மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நாம் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என லீலா பவித்ராவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லீலா பவித்ராவின் உடலில் 16 இடங்களில் சரமாரியாக குத்தினார். லீலா பவித்ரா வலியால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

பின்னர் லீலா பவித்ரா பிணத்தின் அருகே தினகர் கத்தியுடன் அருகே சோகமாக அமர்ந்து கொண்டார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் வந்த புரா போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தினகரை கைது செய்தனர். இதுகுறித்து வேலா பவித்ராவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது பெற்றோர் லீலா பவித்ராவின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

அப்போது லீலா பவித்ராவின் தாயார் கூறுகையில்:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை போன் செய்த மகள் தினகர் என்பவர் சைக்கோவாக மாறி என்னை பயமுறுத்துகிறார். அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என பயமாக உள்ளது என தெரிவித்தார். நாங்கள் வேண்டுமானால் துணைக்கு வருகிறோம் என்று தெரிவித்த போது வேண்டாம் என கூறிவிட்டார். தற்போது எனது மகளை சைக்கோ தினகர் வெறித்தனமாக குத்தி கொலை செய்து விட்டார் எனக் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *