“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

272 0

 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒரு சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.அதை தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Related Post

“86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்

Posted by - August 9, 2025 0
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

Posted by - April 6, 2023 0
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக…

இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted by - January 5, 2026 0
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சம வேலைக்கு சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *