நீரிழிவு நோயாளிகளுக்கு சத்து நிறைந்த ரொட்டி

267 0

சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதுநீரிழிவு நோயாளிகளுக்கு சத்து நிறைந்த ரொட்டி | Red Rice Roti

தேவையான பொருட்கள்

சிவப்பரிசி – 1 கப்

வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – ஒன்று

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கேரட் – ஒன்று

தேங்காய்த்துருவல் – 5 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி

Related Post

உங்கள் மனைவியுடன் சண்டையிடும்போது சொல்லக் கூடாத 7 விஷயங்கள்… என்னென்ன தெரியுமா?

Posted by - December 28, 2024 0
உறவுகளில் விவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​​​நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் மோதலை மோசமாக்கலாம். உதாரணமாக நீங்கள் உங்கள் மனைவியிடம் ஏற்படும்…

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - February 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

Posted by - January 17, 2025 0
பிக் பாஸ் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை…

அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!

Posted by - October 21, 2024 0
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *