சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

206 0

முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா | Kashmiri Mirchi Korma  Marchwangan Korma Kashmiri Mutton Korma

தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ

வரமிளகாய் – 18

வெங்காயம் – 2

பட்டை – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

மட்டன் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

புளி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும். வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

Related Post

உருளைக்கிழங்கை இப்படி செட்டிநாடு ஸ்டைலில் ரோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..

Posted by - October 25, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை சமைக்க நினைக்கிறீர்களா?…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *