பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்.

259 0

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன. வாஷிங்டன் : கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா ‘அதிரடி’ விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடுவது அல்லது உடைந்து சிதறிவிடும். மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை அசுர ‘முத்தம்’ இட்டதும் நடந்திருக்கிறது. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவான பெரும்பள்ளங்கள் இன்றும் பூமியின் முகத்தில் ‘தழும்புகளாய்’ காட்சி அளிக்கின்றன.

எனவே, பாறை, உலோகம் அல்லது பனியால் ஆன இந்த சிறு, குறுங்கோள்கள் பூமியை நெருங்கிவரும்போது, அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன. அதன் விளைவாக, மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற அதிபயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி சீறிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு விமானத்தின் அளவிலான, பாறையாலான ‘2023 எப்இசட்3’ என்ற அந்த சிறியகோள், நாளை (6-ந்தேதி) பூமியை ‘நெருங்கி’ வருகிறது. அச்சப்பட வேண்டாம். இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லப்போகிறது. பல லட்சம் கி.மீ. தூரம் என்றாலும், விண்வெளி பார்வையில் ‘அருகில்’ தான் (ரியல் எஸ்டேட்காரர்கள் ‘சென்னை மிக அருகில்’ என்று சொல்வது போல). அப்படி இந்த சிறுகோள் ‘கொஞ்சம்’ பக்கத்தில் வந்தாலும், ஆபத்தில்லை என்பதில் நாம் அமைதியடையலாம்!

Related Post

“தற்கொ**** எண்ணத்துடன் ChatGPT உடன் பேசும் லட்சக்கணக்கானோர்“; OpenAI வெளியிட்ட பகீர் தகவல்.!

Posted by - October 29, 2025 0
chatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கானோர் தற்கொலை எண்ணத்துடன் பேசுவதாக OpenAI நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன்…

காதலன் தேவை என விளம்பரம் செய்த பெண்

Posted by - August 9, 2023 0
டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று…

சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - September 27, 2023 0
பீஜிங்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *