நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

215 0

நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதேபோல, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை, ‘மாநில அரசை கலந்தாலோசிக்காமல் டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மாநில சுயாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மாநில சுயாட்சிக்கு எதிராக தொடர்ந்து மத்திய பாஜக செயல்பட்டு வருகிறது. 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி மற்றும் தானியங்களை உற்பத்தி செய்கிற இடமாக டெல்டா இயங்கிக் கொண்டிருக்கிறது.

சூரிய ஒளியிலோ, கடல் அலையிலோ மின்சாரம் தயாரிக்க முயற்சிகளை செய்யாமல் கடலூர் மாவட்டம், டெல்டா மாவட்டங்கள் பாதிக்கக்கூடிய அளவில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எந்த வகையில் இந்த திட்டத்தை அனுமதித்தார் என தெரியவில்லை.

எனவே ஜனநாயகத்தை காக்கும் வகையில் தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்து இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, ‘மிகுந்த வேதனையோடு ஆழ்ந்த வருத்தத்தோடு முதலமைச்சரின் எழுதிய கவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. தஞ்சை தரணி என்பது தமிழகத்தின் நெற்களஞ்சியம். எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ காமராஜ், ‘பொன் விளையும் பகுதியான டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பு மற்றும் டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

டெண்டர் கோருவதற்கான நடைமுறை ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில் அரசுக்கு எப்படி தெரியாமல் போனது? பல சூழ்நிலைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோரப்பட்டுள்ள டெண்டரை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Post

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

Posted by - November 30, 2023 0
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது.…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *