“கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன்…” – மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு..!

259 0

குண்டு வைத்து கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல, குடிக்க வைத்து கொள்வதும் இனப்படுகொலைதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப்பில் இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக 60 ஆம் ஆண்டு தேசிய கடலோர தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய சீமான்,  “பூமியை மண் என்று பார்க்காமல் தாயின் மடி என பார்க்க வேண்டும். பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல அனைத்து உயிரிகளுக்கும் சொந்தமானது” என தெரிவித்தார்.

மேலும், கடைசியாக வந்த இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல கடைசியாக வந்த மனிதன் ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றான். அனைத்தையும் அழிக்க பார்க்கின்றான். அதை நாம் விடமாட்டோம். மண்புழு செய்ததை போல் எந்த உயிரும் மண்ணிற்கு பயனை சேர்க்கவில்லை என்று கூறினார்.

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ்  உலகத்தை சிதைந்து விட்டது. கடல் தற்போது குப்பை மேடாக உள்ளது. அனைத்து கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது.  திருவள்ளுவருக்கும் சிலை கடலில் உள்ளதே என்கிறார்கள். இயற்கை பாறை வேறு செயற்கையாக உருவாக்கும் பாறை வேறு. செயற்கையாக உருவாக்கும் பாறைகளால் பல லட்சம் கடல் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். இப்போதும் சொல்கிறேன் கடலில் பேனா வைத்தால் நிச்சயம் உடைப்பேன் என  பேசியுள்ளார்.

Related Post

காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்….

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கனவை, அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே கலைத்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் மீது…

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

Posted by - January 2, 2026 0
தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு…

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - July 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…

“நானும் முருக பக்தன்தான்” திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?

Posted by - June 19, 2025 0
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அழைப்பு குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமா பதில் அளித்துள்ளார். பள்ளிக்காலத்தில் தானும் முருகனை வழிபட்டு பக்தனாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *