வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

215 0

எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்வுக்காக துபாய் சென்றபோது ஹோட்டல் அறையிலேயே மரணமடைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தது. அதாவது திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் தன் இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். ஆனால் ஸ்ரீதேவி மட்டும் தன் மூத்த மகளுக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று அங்கேயே தங்கியிருக்கிறார். அதை தொடர்ந்து போனி கபூர் மீண்டும் துபாய் சென்றபோதுதான் ஸ்ரீதேவியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

 

அது மட்டுமல்லாமல் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் முதலில் அவருக்கு மாரடைப்பு என்று கூறப்பட்டது. பிறகு குளியல் தொட்டியில் தவறி விழுந்ததால் மரணம் என்று சொல்லப்பட்டது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. அதற்கேற்றார் போல் விசாரணையில் போனி கபூரின் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக இருந்திருக்கிறது.

இதனாலேயே ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் துடியால் துடித்தனர். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் கூட இது குறித்து நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மனு போட்டிருந்தார். அவர் குடும்ப உறுப்பினர் இல்லாத காரணத்தால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் உறுதியாக நம்பினர்.

 

ஏனென்றால் ஸ்ரீதேவி தன் பெயரில் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார். அதன்படி அரபு நாடுகளில் அவர் இறந்தால் மட்டுமே அந்த பணம் கைக்கு கிடைக்கும். அதனாலேயே மும்பை நிழல் உலக தாதாவை வைத்து இப்படி ஒரு சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைகளும் அவருடைய மரணம் இயற்கையானது இல்லை என்று தான் சொல்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை

sridevi-report

sridevi-report

மேலும் அவருடைய உடலில் போதைப்பொருள் இருந்ததாகவும், தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு பொய்யான சான்றிதழ் என்றும் உண்மையில் அவருடைய இறப்பு குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்ததால் மட்டுமே என்று மற்றொரு ரிப்போர்ட்டும் வெளிவந்தது. இதில் எது உண்மை என்றுதான் தெரியவில்லை. இதைத்தான் பல மீடியாக்களும் இப்போது வரை விவாதித்துக் கொண்டு இருக்கிறது.

அதில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று இந்த விஷயத்தை பற்றி கூறி மீண்டும் சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே ஸ்ரீதேவிக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறது. அதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்நிய மண்ணில் அநியாயமாய் இறந்து போன இந்த மயிலின் இறுதி நிமிடங்கள் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

Related Post

லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல்.. ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்

Posted by - October 25, 2023 0
லியோ விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. அப்படி இருந்த நிலையிலும்…

தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 2, 2025 0
கூலி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.…

பிச்சைக்காரன் 2 -பக்கா ரிவியூ இதோ!

Posted by - May 20, 2023 0
கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்க்கை பின்னணியில் செண்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி கைகொடுத்ததா? விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்…

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என…

எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

Posted by - January 27, 2023 0
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *