உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

221 0

தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும் 100 டிகிரிக்கு மேல் அடித்து நம்மை பாடாய்படுத்துகிறது. நடந்து சென்றாலும் சரி, பைக், கார் போன்ற வாகனங்களில் சென்றாலும் சரி.. வீட்டிற்கு வந்தவுடனே எப்படா.. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வருவோம். அப்படி தண்ணீர் குடித்தால் மட்டும் தான் நம்மால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும் என்று நினைப்போம். ஆனால் இது சிறந்த வழி அல்ல என்றும், நீங்கள் வெயில் காலத்தில் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இதுக்குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கோரி ரோட்ரிக்ஸ் , ஒரு நாளைக்கு கணிசமான அளவு தண்ணீர் குடிப்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் உதவுகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடலில் தண்ணீர் சத்து இல்லாத போது நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. மயக்கம் வருவது போன்ற நிலையில் தான் அதிகளவு தண்ணீரை நாம் தேடுவோம். நீங்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும் போது, சிறுநீர் வழியாக சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களை தண்ணீராக வெளியேற்றுகிறீர்கள். இதனால் நம்மை அறியாமலே உடல் பலவீனமாகிவிடும். இதனால் தான் தாகத்திற்கு நாம் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் இதோடு சேர்ந்து எலக்ட்ரோல்களை நீங்கள் சேர்க்க வேண்டும்.

எனவே நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் அதனுடன்  உப்பு,இஞ்சி சேர்த்து சாப்பிடலாம். மேலும் வெயில் காலங்களில் சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி பழங்களையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். இளநீரை கூட அடிக்கடி பருகலாம். இவை நிச்சயம் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.பொதுவாக தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் தீர்வாக அமைகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருப்பதால் நீங்கள் அதிகபட்ச வெறும் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமில்லாமல் மேற்க்கூறியுள்ள உணவுப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

Related Post

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சத்துடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?

Posted by - February 14, 2023 0
பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.…

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கிளைமாக்ஸ் போட்டோ வைரல்

Posted by - October 10, 2023 0
விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய…

பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியாவும் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் பங்கேற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Posted by - September 14, 2023 0
பிக் பாஸ் சீசன் 7 விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து  கொள்ளும் போட்டியாளர்கள் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டாக் ஆஃப் தி டவுன்.…

சொதப்பிக்கொண்டு வரும் பிக் பாஸ்.. தேசிய கொடியை மறைத்ததற்கான காரணம் இதுதான்?

Posted by - October 26, 2024 0
#bbtamil8 #biggbosstamil #biggbosstamil8 #sivakarthikeyan #vijaysethupathi #bb8 #vijaytv #tamilnews #indianflag   பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *