இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️

224 0

இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️

மேஷம்✅

உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை மிக்கவரான நீங்கள் எந்தச் செயலையும் தவிர்க்காமல் திறம்படச் செய்வீர்கள். மனதில் இருக்கின்ற குழப்பங்கள் நீங்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை நல்ல கல்லூரியில் சேர்க்கும் வேலையில் முனைப்போடு இருப்பீர்கள்.

ரிஷபம்✅

வாக்கு வன்மையாலும் திட்டமிடும் வல்லமையாலும் தொழிலை முன்னேற்றகரமாக நடத்துவீர்கள். கடுமையான எதிர்ப்புகளை சம்பாதிப்பீர்கள். கேளிக்கை நாட்டத்தில் அதிகம் ஈடுபடாதீர்கள்‌. கைப் பொருளை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள்.

மிதுனம்✅

எந்தச் சிக்கலையும் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். அதே நேரத்தில் வேண்டாத கஷ்டங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள். தாய் தந்தையரின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். மேற்கு திசையில் நிலை வாசல் உள்ள வீட்டை வாங்குவீர்கள். சிறுகடை வியாபாரிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்வீர்கள்.

கடகம்✅

மற்றவர்கள் செய்யும் தவறுக்காக நீங்கள் வீணாக டென்ஷன் அடைவீர்கள். வியாபாரம் செய்யும் போது கோபத்தை விடுத்து வாடிக்கையாளருடன் அன்பாகப் பேசுவீர்கள். வெளியூர்ப் பயணத்தில் தகுதியான இடம் பார்த்து தங்குவீர்கள். வேண்டாத நண்பர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள். அவசியத் தேவைக்காக நெருக்கமான நண்பரிடம் கடன் வாங்குவீர்கள்.

சிம்மம்✅

அவசரப்பட்டு தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள். பேச்சிலும் செயலிலும் அதிகாரத்தைக் காட்டாதீர்கள். அன்பைக் குழைத்துப் பேசினால் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். எந்தக் காரியத்திலும் முன்னாடி நின்று செயல்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பீர்கள். அதனால் தாராளமாக செலவு செய்து மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள்

கன்னி✅

வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தைப் புகுத்துவீர்கள். வசீகரமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். கமிஷன் பங்குப் பரிவர்த்தனை போன்ற தொழில்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணத்தை தடங்கல் இல்லாமல் பெற்றுக் கொள்வீர்கள்.

துலாம்✅

நீதி நேர்மை தவறாமல் எந்தக் காரியத்தையும் செய்ய நினைப்பீர்கள்‌. வேலை முடியவில்லை என்பதற்காக சட்டென்று உணர்ச்சி வசப்படாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள். நில வியாபாரத்தில் கூட்டாக சேர்ந்து அதிகமான முதலீடு செய்வீர்கள்.

விருச்சிகம்✅

மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வன்மையான மனிதர்களையும் வெற்றி பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். காதலை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு✅

வாழ்க்கையில் வளைந்து கொடுத்துச் செல்வது தான் நல்லது என்று நினைப்பீர்கள். அதனால் எடுப்பார் கைப்பிள்ளையாக சிலர் உங்களை நினைப்பதை வெறுப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள் சந்திராஷ்டம நாள். இழப்புகள் வராமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்

மகரம்✅

ஒதுங்கிப்போன உறவுகளை எல்லாம் ஒன்று சேர்க்க பாடுபடுவீர்கள். பிரிந்து போன நண்பரின் குடும்பத்தைச் சேர்த்து வைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்காக நகைகள் வாங்க திட்டம் போடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்✅

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கோபம் வந்தால் உச்சத்தை எட்டுவீர்கள். பிறரின் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டால் அவமானத்தை சந்திப்பீர்கள். நேர்வழியில் காரியம் சாதிக்க நினைக்கும் நீங்கள் வேண்டாதவர்களின் முகஸ்துதிக்கு மயங்கி விடாதீர்கள். செலவுகளைக் குறைத்து பண விரயத்தை தவிர்ப்பீர்கள்

மீனம்✅

ஏற்றத்தாழ்வு பார்க்காத இரக்க குணம் கொண்ட நீங்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள். நான் நினைப்பதுதான் சரி என்று எதிலும் வாதிடாதீர்கள். யார் எதைச் சொன்னாலும் சரியானதைத் தேர்ந்தெடுங்கள். புகழுக்கு மயங்கி பணத்தை இழந்து விடாதீர்கள். நிதானமாக நடந்து கொண்டால் எந்தச் சூழ்ச்சி வலையிலும் சிக்க மாட்டீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

Related Post

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்..தெறித்து ஓடிய பிரபல நடிகை

Posted by - February 22, 2023 0
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான “நாடோடி தென்றல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.…

பெண்களை விட ஆண்கள் இளம் வயதிலேயே மரணமடைய இந்த 7 விஷயங்கள்தான் காரணமாம்… ஜாக்கிரதை…!

Posted by - September 22, 2023 0
உலகம் முழுக்கவே வரலாற்றுரீதியாக, பெண்கள் தங்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் போர் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 2021 இல் நடத்தப்பட்ட…

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *