பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

215 0

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

 

சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என்று சொல்லப்பட்டது. அதன்படி பார்க்கையில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்..

Related Post

3வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு- 4 கட்டுமான நிறுவனம், வீடுகளில் 7½ கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - February 16, 2023 0
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும்…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

Posted by - March 24, 2025 0
மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *