Kanyakumari YouTuber jewellery thef

REELS மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்

123 0

Kanyakumari YouTuber jewellery thef : தங்களிடம் பணம், நகைகள் அதிகமாக இருப்பதாக பந்தாவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பெண் யூடியூபர் வீட்டில் கொள்ளையடித்தது ஏன் என திருடர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சமூகவலைதளத்தின் தாக்கம்

சமூகவலைதளத்தின் தாக்கம் நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்கிறோம் என தெரியாமல் Home Tour- என்ற பெயரில் வீட்டில் என்ன உள்ளது, கழிப்பறை எப்படி உள்ளது என்பது வரை சுற்றி காண்பித்து வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் ஒரு கட்டத்திற்கு மேலே சென்று வீட்டில் உள்ள பணம், நகைகளை காண்பித்து பந்தாவாக வீடியோவும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நகை பணத்தை பந்தாவாக காண்பித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூப்பர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெண் யூடியூப்பர் பந்தா வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம், விஐபி கார்டன் பகுதியில் வசித்து வரும் யூடியூபர் மதுமிதா–வினோத்குமார் தம்பதியினர் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பாக  சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து 118 பவுனுக்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பர் வீட்டில் திருட்டு- கொள்ளையர்கள் கைது

இது தொடர்பாக போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை யார் என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதனையடுத்து யூடிப்பர் வீட்டில் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி(30) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன்,முருகேசன் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருடியது ஏன்.? கொள்ளையர்கள் வாக்குமூலம்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ்வில் அதிகளவில் பணம், நகைகள் காண்பித்து வீடியோ பதிவு செய்தார். எனவே மதுமிதா வீட்டில் நகை பணம் நிறைய உள்ளது. எனவே அங்கு சென்றால் அதிகளவு நகைகளை கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டோம். இதனையடுத்து தான் மதுமிதா வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க வந்ததாக இசக்கி பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related Post

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - டிசம்பர் 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - நவம்பர் 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - மே 16, 2023 0
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - மார்ச் 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…
TN RAIN ALERT 1

TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ…

Posted by - மே 31, 2026 0
TN HEAVY RAIN ALERT: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் 16 மாவட்டங்களில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன