IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

313 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மீதமுள்ள மூன்று அணிகள் யார் என்பதில் சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது. இதில் சென்னை அணிக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு – நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 62 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளுக்குமிடையே நடைபெறும் யுத்தம் இறுதியில் உள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து 18 புள்ளிகளோடு பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக காலடி பதித்துள்ளது. இதன்படி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தலா 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து 8 புள்ளிகள் எடுத்திருப்பதால் இவர்களால் 18 புள்ளிகளை நெருங்கமுடியாது எனவே இரண்டு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதியாகிவிடும். லக்னோ அணியுடன் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது தற்போது ஆபத்தாக வந்து நிற்கிறது. எஞ்சிய போட்டியில் அதிகபட்சம் இரண்டு புள்ளிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதால் முதலிடத்திற்கான வாய்ப்பும் பறிபோனது. இரண்டாவது இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் சென்னை வெற்றி பெற்று மும்பை ஒரு போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டும்.

மும்பை அணி இன்னும் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஏற்கனவே விளையாடிய 12 -ல் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை எட்டிப்பிடிக்க முடியும் என்பதால் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற மும்பைக்கு அதிக வாய்ப்புள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகளை கைப்பற்ற முடியும் இவ்வாறு நடந்தால் சென்னை அணி மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தற்கு போராட வேண்டும்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கிடையே லக்னோ, பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. லக்னோ அணி 12 போட்டிகளில் ஆறு வெற்றி மற்றும் ஒரு முடிவில்லை என்பதன் அடிப்படையில் 13 புள்ளிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெற்றுவிடுவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பும் உறுதியாகும்.  இதனால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பே பறிபோகவாய்ப்புள்ளது.

அதே போல் பெங்களூரு அணியும் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் இரண்டு போட்டி மீதம் இருப்பதால் அந்த அணியாலும் 16 புள்ளிகளை கைப்பற்றி சென்னையை முந்துவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பெங்களூரு அணியும் சென்னைக்கு தலைவலியாக வந்துள்ளது.  பஞ்சாப் அணியை பொருத்தவரையும் 12 போட்டியில் ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளதால். எஞ்சியுள்ள இரண்டில் வெற்றி பெற்று 16 புள்ளிகளோடு நான்காவது இடத்திற்கான போட்டியில் நீடிக்கிறது.

இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் சற்றும் ஒதுங்கி நிற்கின்றனர். ஏதேனும் ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த அணிகளால் பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறமுடியும். இரண்டு அணிகளுக்கும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது தற்போது 12 புள்ளிகள் இருப்பதால் அதிகபட்சம் 14 புள்ளிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் எனவே இந்த இரண்டு அணிகளுக்கும் எறக்குறைய கேட்டு மூடப்பட்டுவிட்டது.

Related Post

தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் – ரோகித் சாதிப்பாரா?

Posted by - March 7, 2025 0
சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முடிவை பொறுத்து ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ்…

தோல்வியில் இருந்து மீண்டு வருமா மஞ்சள் அணி? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted by - April 8, 2024 0
நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றி, அண்ணிய மண்ணில் அடுத்தடுத்து…

மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?

Posted by - April 10, 2025 0
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார்…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

Posted by - September 15, 2025 0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது…

‘இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்து மதீஷா பதிரனா…’ – தோனி பாராட்டு

Posted by - May 7, 2023 0
பதிரனா டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்தாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *