அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!

296 0

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Posted by - February 17, 2023 0
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில்…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

Posted by - March 14, 2025 0
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *