ஐபிஎல் ஃபைனலில் சென்னையுடன் மோதுகிறது குஜராத் டைட்டன்ஸ்…

226 0

நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 234 ரன்களை சேஸிங் செய்த மும்பை அணியால் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 16 பந்துகளை எதிர்கொண்ட சாஹா 3 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து களத்திற்கு வந்த சாய் சதர்சனுடன் இணைந்து சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறக்க அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 49 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த கில் 60 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது சாய் சுதர்சன் ரிடைர்டு அவும் முறையில் வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 2  சிக்சர் 2 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கினர்.

கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்னிலும், நெஹல் வதேரா 4 ரன்னிலும் ஆட்டமிழக்க சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். திலக் வர்மா – சூர்ய குமார் யாதவ் பார்ட்னர்ஷிப் அணிக்கு நம்பிக்கை அளித்தது. 14 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் திலக் வர்மா 43 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன்கைள சேர்த்த சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து 61 ரன்கள் எடுத்தார். சூர்ய குமாரின் விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Post

5-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Posted by - May 30, 2023 0
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா? ஃபைனலில் நுழைந்த பாக்., – ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறை..

Posted by - September 26, 2025 0
ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும்…

தோல்வியில் இருந்து மீண்டு வருமா மஞ்சள் அணி? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted by - April 8, 2024 0
நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றி, அண்ணிய மண்ணில் அடுத்தடுத்து…

ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி – ஜெமிமா வெறித்தனம்

Posted by - October 31, 2025 0
Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு, இந்திய அணி பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளது. Jemimah…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *