தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு 300 கோடி வசூலித்தது.அதேவேகத்தில் லியோ திரைப்படமும் இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் – லோகேஷ் கூட்டணி, லியோவிலும் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே லியோ படத்திற்கு ஹைப் கூடிக்கொண்டே வருகிறது.
விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜில்லா. இப்படத்தை ஆர்.டி. நேசன் என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ், மகத், விவேதா தாமஸ், சம்பத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திராத ஜில்லா படத்தின் இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..