SSMB28 Title Release! வெளியிடும் Super Fans! மகேஷ் பாபு கொடுத்த Surprise!

322 0

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். SSMB 28 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை திரிவிக்ரம் இயக்கி வருகிறார். மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் SSMB 28 இந்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது புதிய ரிலீஸ் தேதியுடன், SSMB 28 டைட்டில் குறித்த அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மகேஷ் பாபு, தற்போது தனது 28வது படத்தில் நடித்து வருகிறார்.

 

 

திரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது. மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மகேஷ்பாபு, திரிவிக்ரம் இருவருமே தெலுங்கில் மாஸ் கூட்டணியாக கலக்கி வருகின்றனர். ஏற்கனவே அத்தாடு, கலேஜா படங்கள் மூலம் மாஸ் காட்டிய மகேஷ்பாபு, திரிவிக்ரம் மீண்டும் மூன்றாவது முறையாக அதிரடி காட்டவுள்ளனர். இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியானது முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 

 

அதேபோல், SSMB 28 படத்தை இந்தாண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், மகேஷ்பாபுவின் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் SSMB 28 படப்பிடிப்பு தாமதமானது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக SSMB 28 படப்பிடிப்பில் பிஸியான மகேஷ் பாபு, தற்போது அடுத்தடுத்து இரண்டு அப்டேட்களை வெளியிட்டு அமர்க்களம் செய்துள்ளார். அதன்படி, SSMB 28 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. அதேபோல், SSMB 28 டைட்டில் குறித்தும் தற்போது அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த அப்டேட்டின் படி SSMB 28 டைட்டில் வரும் (மே) 31ம் தேதி வெளியாகும் அறிவித்துள்ளது.

 

 

மேலும் இந்த டைட்டில் டீசர் வீடியோவை மகேஷ் பாபுவின் சூப்பர் பேன்ஸ் வெளியிடவுள்ளதாகவும் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களே வெளியிடவுள்ள இந்த டைட்டில் டீசரை டோலிவுட்டே எதிர்பார்த்துள்ளது. மேலும், SSMB 28 டைட்டில் அப்டேட்டுடன் மகேஷ்பாபுவின் மாஸ்ஸான போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அதேநேரம் SSMB 28, மகேஷ் பாபு போன்ற ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் வெளியானதும் ராஜமெளலி இயக்கும் SSMB 29 படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ்பாபு. இதுவும் டோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Posted by - January 30, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை இயக்குநர் ஹெச்.…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - November 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *