உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

223 0

இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பணம் முறைகேடு செய்த கல்லால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. லைக்கா நிறுவனம் தனது புகார் மனுவில் 114.27 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கல்லால் குழுமம்  மோசடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆனால், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் மோசடி பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடியாக இருக்கும் என்று தெரியவந்தது.

மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் (Suspicious Cash and Hawala Transaction) கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக  கடந்த 25.05.2023 அன்று, குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடங்கியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் ரூபாய்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.விசாரணையின் போது, கல்லால் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Post

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

ஜப்பானிய வாட்டர் தெரபி என்றால் என்ன? ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமாம்…!

Posted by - December 6, 2023 0
தினமும் காலையில் எழுந்தவுடன் பல கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஜப்பானிய நீர் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால்,…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *