திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

335 0

அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், சிங்கப்பூரில் தமிழ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும், அதனைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார். அவர்களது பலவீனத்தை வைத்து தாங்கள் அரசியல் செய்வதில்லை என்றும், தங்களது கொள்கையையும், தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் செயல்பட உள்ளதாகவும் கூறினார்.

கருணாநிதி காலத்தில் இருந்ததைப் போன்று, பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பாஜக-வுக்கும், தற்போதைய பாஜக-வுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

வடமாநில தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். உலகின் எந்தப் பகுதியில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

Related Post

பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: வெண் பூசணி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ஜூஸை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா? நீர் சத்து இருக்கும்…

வானிலை அலெர்ட்…!

Posted by - May 10, 2023 0
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

விளாத்திக்குளம் கொலை.! சிசிடிவியை ஆராய 10 நாட்களா.? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை

Posted by - March 19, 2026 0
சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *