ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி… வைரலாகும் புகைப்படம்

286 0

கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய காரணமாக இருந்தார். அவரை தோனி தூக்கி வைத்து கொண்டாடிய காட்சி வைரலாகியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.ஜடேஜாவை கொண்டாடும் தோனி

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியபோது 3 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைபட்டிருந்த நிலையில் நள்ளிரவு 12.10க்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, ஓவர்கள் 15 ஆகவும், வெற்றி இலக்கு 171 ரன்னாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.  சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்னும், டெவோன் கான்வே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தனர். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அம்பதி ராயுடு 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினார்.

கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை மோகித் சர்மா வீச முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 2, 3 மற்றும் 4 ஆவது பந்துகளில் தலா 1 ரன்கள் எடுக்கப்பட 5 ஆவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தோனி தூக்கி வைத்து கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Post

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

Posted by - December 4, 2025 0
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - December 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *