நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

237 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராஜன் சுனந்தா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்களும் முடக்கப்பட்டுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.முன்னதாக தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இருப்பினும் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Post

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு .

Posted by - July 14, 2025 0
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்…

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

Posted by - July 29, 2025 0
மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *