ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தலைவர் 170. Tj ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
நோ சொன்ன முன்னணி நடிகர்
இப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ரூ. 50 கோடி சம்பளமாக தருகிறோம், வில்லனாக நடிங்க என தயாரிப்பு நிறுவனம் ஆஃபர் கொடுத்துள்ளது.
ஆனாலும் தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க நோ கூறிவிட்டாராம் விக்ரம். இதனால் தற்போது விக்ரம் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அர்ஜுனை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே லியோ படத்தில் நடித்து வரும் அர்ஜுன் தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்திலும் கமிட் ஆவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்..