கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

365 0

கடலூர்:

கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர்.கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர் | A Cuddalore  boy who crossed the sea and held hands with a Norwegian girl

அதனைத் தொடர்ந்து சிவானந்தினியும் அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இரு குடும்பத்தினரும் பேசி அதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ்முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும் நார்வேவில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்து கோவில்களில் தமிழ் முறைப்படி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்பொழுது நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்தார்.

நார்வே சென்றபோது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சம்மதத்துடன் இந்த திருமணம் நிறைவேறி உள்ளதாக மண மகன் பாலமுருகன் தெரிவித்தார். இலங்கையில் இருந்து நார்வே சென்று குடியேறிய இலங்கை தமிழர் குடும்பத்தினர் தற்பொழுது கடலூரைச் சேர்ந்த மண மகனை கடலூருக்கு வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.

 

 

 

Related Post

“தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்” – அலெர்ட் செய்த வானிலை மையம் – எங்கெல்லாம் தெரியுமா?

Posted by - April 6, 2024 0
சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ்…

குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

Posted by - January 20, 2024 0
திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர்…

தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Posted by - November 22, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய…

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.…

காலை 10 மணி வரை நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - December 11, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *