“தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்” – அலெர்ட் செய்த வானிலை மையம் – எங்கெல்லாம் தெரியுமா?

203 0

சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் , உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (06.04.2024), நாளையும் (07.04.2024) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 அன்று கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09.04.2024 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10.04.2024 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் 11.04.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு :

06.04.2024 முதல் 10.04.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

06.04.2024 மற்றும் 07.04.2024 ஆகிய தேதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

மேலும் 08.04.2024 முதல் 10.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சக்கரிகை :

09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இந்நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

Posted by - February 16, 2023 0
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால்…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - December 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

Posted by - March 2, 2023 0
செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *