மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

402 0

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 3 ஓட்டல்களுக்கு ‘ரேட்டிங்’ கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு ‘டாஸ்க்’ வழங்கப்பட்டது.Mumbai: Cyber fraud in police uniform on video call, man duped of Rs 3 lakh

அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம்.

புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்’ எனக்கூறினர்.

Related Post

சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? ஞாயிறு இரவு நடந்தது என்ன?

Posted by - December 8, 2023 0
சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகள் வெள்ளத்தில் சிக்க என்ன காரணம் , ஞாயிறு இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. ஞாயிறு அன்று காலை…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *