இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

211 0

சிம்லா:

தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை பெய்தது.இமாச்சலில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு | 88  people lost their lives due to heavy rains in himachal-pradesh

இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின.

333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிம்லா – மணாலி, சண்டிகர் – மணாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Post

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023 0
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம்…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

எந்த மொழியும் திணிக்கப்படவில்லை – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Posted by - February 18, 2025 0
இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *