வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

330 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார். அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.Cute Baby Feet Stock Photo - Download Image Now - Baby - Human Age, Foot,  Newborn - iStock

இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.

கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

Related Post

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *