கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

218 0

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு வீடுகளில் இந்த சம்பவம் நடந்தது.Murder under Indian Penal Code: All you need to know about it

கொலையுண்டவர்கள் அமரேந்திர தே மற்றும் அவரது தாயார் சங்கரி தே ஆவார்கள். அமரேந்திர தேயை காணவில்லை என்று அவரது மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார். அதேபோல் சங்கரி தேயை காணவில்லை என்று அவரது உறவினர் புகார் செய்தார்.

இதையடுத்து அமரேந்திர தேயின் மனைவிமீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தனது காதலன் மற்றும் குழந்தைப்பருவ நண்பருடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

அவர்களின் உடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் அடைத்துள்ளார். பின்னர் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு கொண்டு சென்று பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஜான்மதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 7 மாதங்களுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியுள்ளது.

Related Post

பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்

Posted by - July 24, 2023 0
திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது. உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - December 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *