ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

208 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர்.

அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார். ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார்.

அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார். இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.

பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர். இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார்.

இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார். விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.

Related Post

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - August 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - March 1, 2024 0
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *