உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

311 0

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி.

எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 மாதங்களில் இம்மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி.பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் இம்மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணி பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுOver 60 pregnant women found HIV positive in 16 months in UP hospital, probe  ordered - Sanj Samachar

இது தவிர, முன்னதாக இதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களில் 35 கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்கனவே எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு தேவையான மருந்துகளை கொடுத்து வருகிறது. இது குறித்து மீரட் மருத்துவமனை அதிகாரி அகிலேஷ் மோகன் கூறுகையில், “மீரட் லாலா ரஜபத் ராய் மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். எவ்வாறு அவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரே மருத்துவமனையில் இந்த அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. பொதுவாக பாலியல் உறவு, ரத்தம் பரிமாற்றம், ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. தாயிடமிருந்து பிரசவத்தின் போதும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

Related Post

பாசிட்டிவ் மோடில் பங்குச் சந்தை..

Posted by - August 16, 2024 0
இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1% மேல் உயர்வுடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் காலையிலேயே உற்சாக மனநிலையில் இருக்கின்றனர்.…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *