பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்

229 0

திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.உஷார்: பேஸ்புக் காதல்: நேரில் வர சொன்ன 20வயது பெண்., இளைஞருக்கு நேர்ந்த  அதிர்ச்சி சம்பவம்! | Facebook Love: Girl Arrested For Cheating Young On  SocialMedia! - Tamil Gizbot

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார். இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது கணவர் அரவிந்து கூறுகையில் ”அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது.

தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை” என்றார். அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

Related Post

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயம்..

Posted by - March 15, 2024 0
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர்…

ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் – தவெகவின் தரமான சம்பவம்

Posted by - March 5, 2025 0
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் மாநில அரசுகளுக்கு உரிய…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - August 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

Posted by - July 13, 2023 0
சிம்லா: தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *