சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

197 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார். மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.Baby Hand Reaching Images – Browse 6,212 Stock Photos, Vectors, and Video |  Adobe Stockஇரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது. அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Related Post

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்

Posted by - August 24, 2023 0
பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால்…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *