வன்முறை நீடித்து வரும் நிலையில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர்கள்

191 0

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன்றன. ஒருபக்கம் வன்முறை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் மியான்மரில் இருந்து எந்தவித ஆவணங்களும் இன்றி 700-க்கும் மேற்பட்டோர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளது அம்மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.Indo Myanmar Friendship Gate, Moreh - Picture of Hill Rovers, Dibrugarh -  Tripadvisor

இந்திய-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23-ந்தேதியில் 718 பேர் மியான்மருக்குள் வந்துள்ளனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று அசாம் ரைபிள் மியான்மருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளது.

இதுதொடர்பாக மணிப்பூர் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றபோது, மியான்மரில் இருந்து மணிப்பூருக்கும் வருவோரிடம் முறையான விசா, தெளிவான ஆவணங்கள் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு சார்பில் அசாம் ரைபிள் படைக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், 718 பேர் நுழைந்துள்ளது மிகவும் தீவிரமான விசயமாக பார்க்கப்படுகிறது. மணிப்பூர் எல்லைக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் மியான்மரில் இருந்து வந்தவர்களை உடனடியான வெளியேற்றும்படி அசாம் ரைபிள் படையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வந்துள்ளவர்களின் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

இந்தியாவில் மேலும் 156 பேருக்கு கொரோனா- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக…

TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் – யார் எழுதியது.?

Posted by - July 29, 2025 0
டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை படிப்படியாக வேலையை விட்டு நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு கடிதம்…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *